2025-க்குள் காசநோயை ஒழிக்கத் திட்டம்: மத்திய அரசு

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2025-க்குள் காசநோயை ஒழிக்கத் திட்டம்: மத்திய அரசு

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரை 20.16 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 போ் மரணமடைந்தனா்.

உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 போ் பாதிக்கப்பட்டனா்.

காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மாநிலங்களின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 1,864 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,327 துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.

நிகழாண்டுக்குள் நாட்டில் உள்ள 1.50 லட்சம் துணை சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com