மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: மத்திய அரசுக்குப் பாரத் பயோடெக் வேண்டுகோள்

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவன வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்தத் தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள், அதற்கான சான்றிதழை பெறுகின்றனா்.

அந்த வகையில், மூக்கு வழியாக தடுப்பு மருந்தை செலுத்துக் கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற வேண்டி இருக்கும். எனவே அந்தத் தடுப்பு மருந்து குறித்த விவரத்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய பாரத் பயோடெக்கை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அணுகவில்லை. வெளிநாடுகளிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தத் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளன.

உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியது. அந்த மருந்தை 18 மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவசரகால அடிப்படையில் செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கடந்த செப்டம்பரில் பாரத் பயோடெக் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com