மும்பை - அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவில் தொடக்கம்

மும்பை மற்றும் சான்பிரான்சிஸ்கோ இடையே ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவையை  விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (டிச.15) தொடங்கி வைத்தார்.
மும்பை - அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவில் தொடக்கம்

புதுதில்லி: மும்பை மற்றும் சான்பிரான்சிஸ்கோ இடையே ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவையை  விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (டிச.15) தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிந்தியா, வாரத்திற்கு மூன்று முறை இந்த விமானம் இயக்கப்படும். தற்போது ஏர் இந்தியா மும்பையில் இருந்து நெவார்க் வரை இந்த சேவைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். அதே வேளையில், அடுத்த ஆண்டு முதல் மும்பையை நியூயார்க்குடன் இணைக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.

தற்போது சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஏற்றத்தின் உச்சத்தில் உள்ளது. இந்த நிகழ்வை காணொலி மூலம் தில்லி மற்றும் மும்பையில் இருந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏர் இந்தியாவின் பயணத்தில், மும்பை-சான் பிரான்சிஸ்கோ சேவை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார் ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன். அதே வேளையில் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையிலிருந்து நியூயார்க், பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட்டுக்கு இடையே இடைவிடாத விமான சேவை தொடங்கும் என்றார்.

இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மாநிலத்தில் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், விமான இணைப்பை அதிகரிக்க ஒவ்வொரு தாலுகாவிலும் ஹெலிபேடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 10-ஆம் தேதியன்று  24 மணி நேரத்தில் மொத்தம் 1,50,988 பயணிகள் மும்பை விமான நிலையம் வழியாக மக்கள் பயணித்ததாகவும் அவர் தரவுகளை மேற்கோள்காட்டி தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில் இழப்பில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்திய பிறகு, விமான நிறுவனம் அதன் சேவைகள் மற்றும் விமானங்களை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com