
ரயிலில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி!
ரயிலில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
ரயில்வே துறையில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியிலிருந்து பயணித்த ரயிலில் தனது 2 வயது குழந்தைக்காக பயணி ஒருவர் ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய ஆம்லேட்டில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்துள்ளது.
அதனை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, டிசம்பர் 16ஆம் தேதி தில்லியிலிருந்து பயணித்தோம். எங்கள் குழந்தைக்காக ரயிலில் கூடுதலாக ஆம்லெட் ஆர்டர் செய்திருந்தோம். அதில் என்ன இருந்தது என புகைப்படத்தில் காணுங்கள். கரப்பான் பூச்சி! என் மகளுக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. இதை உண்டு என் மகளுக்கு ஏதாவது ஆனால், யார் பொருப்பேற்பது என கேள்வி எழுப்பி, பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை அவர் டேக் செய்துள்ளார்.
இதற்கு ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. தங்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து பிஎன்ஆர் எண்ணையும், தொலைப்பேசி எண்ணையும் கொடுங்கள் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.
16dec2022,We travel from Delhi by (22222). In morning, we ordered extra omlate for baby. See attach photo of what we found! a cockroach? My daughter 2.5 years old if something happened so who will take the responsibilities @PMOIndia @PiyushGoyal @PiyushGoyalOffc @RailMinIndia pic.twitter.com/X6Ac6gNAEi
— Yogesh More - designer (@the_yogeshmore) December 17, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...