ரூ.2 சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 நோட்டு? அதிர்ஷ்டத்தை சோதிக்க போட்டி போட்டு சிப்ஸ் வாங்கிய பெற்றோர்கள்!

கர்நாடகத்தில் ரூ.2 சிப்ஸ் பாக்‍கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்ததால் அதிர்ஷ்டத்தை சோதிக்க கடைகளில் போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு சிறுவர்கள் முதல் பெற்றோர்களின் கூட்டம் அலைமோத
ரூ.2 சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 நோட்டு? அதிர்ஷ்டத்தை சோதிக்க போட்டி போட்டு சிப்ஸ் வாங்கிய பெற்றோர்கள்!


கர்நாடகத்தில் ரூ.2 சிப்ஸ் பாக்‍கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்ததால் அதிர்ஷ்டத்தை சோதிக்க கடைகளில் போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு சிறுவர்கள் முதல் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதியது. 

சிப்ஸ் மற்றும் குர்குரே போன்ற பாக்கெட்டில் உள்ள தின்பண்டங்கள் சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. வீட்டின் பக்கத்து பெட்டிக்கடை முதல் பள்ளிக்கு வெளியே அமர்ந்திருக்கும் பாட்டி கடை வரை சிறுவர்களின் கண்ணில் படும்படியாக பல வண்ணங்களில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்குகின்றன. ரூ.1 முதல் ரூ.10 வரையிலான ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுக்குமாறு பெற்றோர்களை குழந்தைகள் நச்சரிக்கின்றனர். உடல் நலத்திற்கு நல்லதல்ல எனக் கூறி பெற்றோர்கள் அதனை வாங்குவதில்லை. ஆனால் தற்போது அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க சிறுவர்கள் முதல் பெற்றோர்களின் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகம் மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குன்னூர் கிராமத்தில் சிலர் வாங்கிய ரூ.2 மதிப்புள்ள சிப்ஸ்  பாக்கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளுக்கு சென்று அந்த நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை போட்டி போட்டிக்கொண்டு வாங்கி தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர்.  

அதாவது ஒரு நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்டுகளிலும் ரூ. 500 நோட்டுகள் சிக்கியது. சிலர் வாங்கிய ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் மட்டும் 5 முதல் 6 ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது.  ஒரு சிலருக்கு 2 முதல் 3 ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது. சிப்ஸ் பாக்கெட் இருந்த ஒரு பெரிய பாக்கெட்டில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டில் மட்டும் சுமார் ரூ.20 ஆயிரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குன்னூர் கிராமத்தில் உள்ள சில கடைகளில் கிடைக்கும் இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் கடந்த 5-6 நாள்களாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட சிப்ஸ் பாக்கெட் முற்றிலும் விற்று தீர்ந்துள்ளது. அந்த​ கிராமத்தில் சுமார் ரூ. 30 ஆயிரத்து சிப்ஸ் மட்டும் விற்பனையாகி உள்ளது. மேலும், கடைகளில் இருந்த அனைத்து நிறுவன சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. 

அதன்பின்பு மீண்டும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்த புதிய சிப்ஸ் பாக்கெட்டுகளை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். ஆனால் அவற்றில் அத்தகைய பணமும் எதுவும் இல்லாததால் நேற்று ஆர்வத்துடன் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் கடந்த 5 முதல் 6 நாள்களில் மட்டும் எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். 

இதனிடையே, தங்களது நிறுவன சிப்ஸ்களை பிரபலப்படுத்த அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை பரிசாக வைத்திருக்கலாம் என்றும், சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த ரூ.500 நோட்டுகள் போலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவை போலி நோட்டுகள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com