விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை திட்டம் அறிமுகம்!

சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் அரசுத் திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்(எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், 

விபத்துக்குள்ளானவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த வசதி உதவும்.

மோகன்லால்கஞ்ச் நகரில் வசிக்கும் ராகுல் சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் சனிக்கிழமை காலை சாலை விபத்தில் சிக்கினார். கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது அவரது உயிரைக் காப்பாற்றியது. அவரிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

முதல் 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்வதற்கும், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கும் அதிக நேரம் எடுக்கும். 

சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் வெகுதொலைவில் இருக்கும். இந்த நிலையில், உறவினர்களுக்காக காத்திருக்காமல் சிகிச்சையைத் தொடங்க இந்த இலவச சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com