
தனது பச்சிளம் குழந்தையுடன் சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த மகாராஷ்டிர பேரவை உறுப்பினரை கண்டு சக உறுப்பினர்கள் ஆச்சரியமடைந்தனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை கூடியுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்த நிலையில், இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார்.
பச்சிளம் குழந்தையுடன் பேரவை வளாகத்தில் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதையும் படிக்க | காத்திருக்கும் அதிர்ச்சி: போன் பே, கூகுள் பே பயனாளர்களுக்கு விரைவில் கட்டுப்பாடு
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு சரோஜ் பாபுலால் அளித்த பதிலில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக கரோனா காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. தற்போது நான் தாயாகி உள்ளேன். இருப்பினும், எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெற கூட்டத்திற்கு வந்துள்ளேன்” என்றார்.
மேலும், சரோஜ் பாபுலால் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...