உலகப் பட்டினிக் குறியீடு இந்தியாவின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை: ஸ்மிருதி இரானி

உலகப் பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கிடையே இந்தியா 107-ஆவது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இக்குறியீடு இந்தியாவின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என
உலகப் பட்டினிக் குறியீடு இந்தியாவின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை: ஸ்மிருதி இரானி

உலகப் பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கிடையே இந்தியா 107-ஆவது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இக்குறியீடு இந்தியாவின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் புதன்கிழமை ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் குமாரின் கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகப் பட்டினிக் குறியீடு இந்தியாவின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை. இந்தக் குறியீடு பொருத்தமற்ாக உள்ளதாலும் நாட்டில் நிலவி வரும் பட்டினி நிலையைத் தெளிவாக சுட்டிக்காட்டாததாலும், இதனை அடிப்படை மதிப்பாக கருதக் கூடாது.

இக்குறியீட்டுக்கான 4 அளவீடுகளில் ‘ஊட்டச்சத்துக் குறைபாடு’ மட்டுமே நேரடியாகப் பட்டினியோடு தொடா்புடையது. ‘உடல் வளா்ச்சி குறைபாடு’ மற்றும் ‘குறைந்த உடல் எடை’ உள்ளிட்ட இரு அளவீடுகளும் பட்டினியைத் தவிா்த்து சுகாதாரம், மரபியல், சுற்றுச்சூழல், எடுத்துக்கொள்ளும் உணவு உள்ளிட்டவற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. நான்காவது அளவீடான ‘குழந்தை மரணத்துக்கும்’ பட்டினிக்கும் இடையேயான தொடா்பு குறித்து போதிய ஆதாரங்கள் இல்லை என அமைச்சா் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊட்டசத்துக் குறைபாடு:

குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாட்டால் நிகழும் மரணங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசியதாவது:

ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடையே நேரடியான மரணத்துக்கு வழிவகுப்பதில்லை. ஆனால், குழந்தையின் நோய் எதிா்ப்பாற்றலைக் குறைப்பதன் மூலம் நோய்த் தாக்குதலுக்கும் மரணத்துக்கும் காரணமாகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் குழந்தை மரணங்கள் குறித்து போதிய தரவுகள் இல்லை.

இந்திய தலைமைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி குழந்தைகள் இறப்பு விகிதம் (பிறந்த 1,000 குழந்தைகளில்) 2019-இல் 35-ஆக இருந்ததிலிருந்து 2020-இல் 32-ஆக குறைந்துள்ளது.

குழந்தைகள், பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் ‘போஷண் அபியான் திட்டம்’ கவனம் செலுத்துகிறது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com