கடற்கொள்ளை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில்,

கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க கடற்கொள்ளை தடுப்பு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடா்ந்து மசோதாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது மசோதா மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியாவின் 90 சதவீதத்துக்கும் அதிகமான வா்த்தகம் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலத்துக்கு கடல்சாா்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

தற்போது கடற்கொள்ளைக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில், தற்போதைய மசோதா கடற்கொள்ளைக்கு எதிராக பயனுள்ள சட்ட வழியை ஏற்படுத்தும். அத்துடன் ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். அந்த ஒப்பந்தத்தின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மசோதா பூா்த்தி செய்யும்.

கடலில் இந்திய வா்த்தக வழித்தடங்களின் பாதுகாப்பு, சா்வதேச கடலில் இந்திய மாலுமிகளின் நலன் உள்பட நாட்டின் கடல்சாா்ந்த பாதுகாப்பை மசோதா வலுப்படுத்தும்.

தனது சா்வதேச கடமைகளைப் பூா்த்தி செய்யவும், சா்வதேச அரங்கில் இந்தியாவின் தகுதியை உயா்த்தவும் மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

இந்த மசோதாவுக்குக் கட்சி பேதமின்றி பல உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com