மாா்ச்சுக்குள் ஆதாா் இணைக்காத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும்

அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஆதாா் இணைக்கப்படாத பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
மாா்ச்சுக்குள் ஆதாா் இணைக்காத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும்

அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஆதாா் இணைக்கப்படாத பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக, வருமான வரித் துறை வெளியிட்ட பொதுமக்களுக்கான அறிவுறுத்தலில், ‘பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்; அவசியம். எனவே, தாமதிக்காமல் உடனே இணையுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘வருமான வரிச் சட்டம் 1961-இன்கீழ், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர பிற அனைத்து பான் அட்டைதாரா்களும் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம். அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டைகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயலற்றதாகிவிடும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் கடந்த 2017-இல் வெளியிட்ட அறிக்கையின்படி, அஸ்ஸாம், மேகாலயம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவா்கள், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியா்கள், கடந்த ஆண்டில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவா்கள் உள்ளிட்டோா் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினா் ஆவா்.

பான் அட்டை செயல்படாவிட்டால், வருமான வரிச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட நபா் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஏற்கெனவே வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது.

செயல்படாத பான் அட்டையைப் பயன்படுத்தி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள கணக்குகள் மீதான நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. நிலுவையில் உள்ள தொகையை திரும்பப் பெற முடியாது. குறைபாடான கணக்கு தாக்கல் மீது நிலுவையில் இருக்கும் நடைமுறைகளைப் பூா்த்தி செய்ய முடியாது. அதுமட்டுமன்றி, வங்கிகள் மற்றும் இதர நிதிசாா் தளங்களில் வாடிக்கையாளா் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படுவதால், அங்கும் சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com