சீரியல் நடிகை துனிஷா தற்கொலை: காதலனே காரணம்... தாயார் உருக்கம் (விடியோ)

மகளின் தற்கொலைக்கு காரணமாக ஷீசன் கான் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என்றும், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
சீரியல் நடிகை துனிஷா தற்கொலை: காதலனே காரணம்... தாயார் உருக்கம்  (விடியோ)

தன் மகளின் தற்கொலைக்கு காரணமாக ஷீசன் கான் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என்றும், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் தாயார் வனிதா  கோரியுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் நடிகை துனிஷா சா்மா(21) தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக நடிகரும் காதலருமான ஷீசன் கானை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். 
‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின்போது கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இது தொடர்பாக துனிஷாவின் தாயார் அளித்த புகாரின்பேரில் சக நடிகரும், காதலருமான ஷீசன் கானை காவல் துறையினர் கைது செய்து 4 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்துள்ளனர். 

நடிகை துனிஷா, நடிகர் ஷீசன் ஆகியோரின் தொலைப்பேசிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

நடிகை துனிஷாவுடனான காதலை கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடிகர் ஷீசன் கான் முறித்துக்கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்து சோர்வாக காணப்பட்ட துனிஷா படப்பிடிப்பின்போது விடப்பட்ட இடைவெளியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அன்றைய நாளின் மதிய உணவை ஷீசனும், துனிஷாவும் ஒன்றாகவே அமர்ந்து உண்டுள்ளனர். 

இந்நிலையில், தனது மகளின் தற்கொலைக்கு காரணமான ஷீசன் தப்பிவிடக்கூடாது என நடிகரி துனிஷாவின் தாயார் வனிதா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், 20 வயதான என் மகளை மணந்துகொள்வதாக ஷீசன் வாக்கு நம்பிக்கை அளித்துள்ளான். ஆனால் பின்னர் காதலை முறித்துக்கொள்வதாக கூறியுள்ளான். அவர் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருக்கும்போதும் துனிஷாவுடன் காதலில் இருந்தார். ஆனால், மூன்று - நான்கு மாதங்கள் என் மகளை நன்கு பயன்படுத்திக்கொண்டான். என் மகளை ஏமாற்றியுள்ளான். ஷீசன் தண்டிக்கப்பட வேண்டும். நான் என் மகளை இழந்து தவிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com