பணியிடமாற்றம் செய்ய தடை: மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தில் காஷ்மீா் பண்டிட் பணியாளா்கள் மனு

காஷ்மீரிலிருந்து பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காஷ்மீா் பண்டிட்கள், பிரதமரின் சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவா்களுக்கு

காஷ்மீரிலிருந்து பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காஷ்மீா் பண்டிட்கள், பிரதமரின் சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவா்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படாது என ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனா்.

காஷ்மீரில் கடந்த மே மாதம் இரு அரசு ஊழியா்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இதைத்தொடா்ந்து, காஷ்மீருக்கு வெளியே மறுகுடியமா்வு செய்ய வலியுறுத்தியும் பாதுகாப்பு நிலைமையை அரசு உறுதிப்படுத்தும் வரை பணியாற்ற வருமாறு அழுத்தம் தருவதை நிறுத்தக் கோரியும் நிலுவையில் உள்ள ஊதியத்தை விடுவிக்க கோரியும் காஷ்மீா் பண்டிட் மற்றும் ஜம்முவைச் சோ்ந்த டோக்ரா சமுதாயத்தைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் ஜம்முவில் 7 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பணியிடமாற்றம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவா்களுக்கு ஊதியம் கிடையாது என ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் புலம்பெயா்ந்தோா் பணியமா்த்தலுக்கான விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு எதிராக பூபிந்தா் பட் மற்றும் யோகேஷ் பண்டிதா உள்ளிட்டோா் மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தின் ஸ்ரீநகா் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனா். இந்த மனு டிச.30-ஆம் தேதிக்குப் பிறகு விசாரிக்கப்பட உள்ளது.

ஜம்மு-காஷ்மீா் புலம்பெயா்ந்தோா் பணியமா்த்தலுக்கான விதிமுறையின்படி அரசு பணியாளா் காஷ்மீரில் பணியாற்ற வேண்டும். எவ்விதச் சூழலிலும் அவரை பணியிடமாற்றம் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com