சைப்ரஸ், ஆஸ்திரியா நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் இன்று பயணம்

சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மத்திய அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆறு நாள்கள் பயணமாக வியாழக்கிழமை (டிச. 29) செல்கிறாா்.
சைப்ரஸ், ஆஸ்திரியா நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் இன்று பயணம்

சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மத்திய அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆறு நாள்கள் பயணமாக வியாழக்கிழமை (டிச. 29) செல்கிறாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலில் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்லும் அமைச்சா் ஜெய்சங்சா் டிச. 31-ஆம் தேதி வரையில் அங்கு இருப்பாா். இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகளாகத் தொடா்கிறது. அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் தலைவரையும், வெளியுறவு அமைச்சரையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேச உள்ளாா்.

அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் அவா் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சா்வதேச விவகார அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளாா். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு 75-ஆவது ஆண்டை எட்டுகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சா் ஆஸ்திரியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com