விபத்துக் காப்பீடுகளை கையாள காவல் நிலையங்களில் சிறப்புப் பிரிவு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வாகன விபத்துக் காப்பீடு வழக்குகளை கையாள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவை மூன்று மாதங்களில் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வாகன விபத்துக் காப்பீடு வழக்குகளை கையாள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவை மூன்று மாதங்களில் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் பலியான 24 வயதான இளைஞருக்கு ரூ.31,90,000 இழப்பீட்டு தொகை அளிக்க வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்:

சாலை விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்தில் வாகன இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயத்தில் முதல் தகவல் அறிக்கையை காவல் துறை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களில் காவல் நிலையை தலைமைக் காவலா் விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் .

விபத்துக்குள்ளான வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம், வாகனத்தின் தகுதி உள்ளிட்டவரை சரி பாா்க்க வேண்டியது வழக்கை பதிவு செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், ஓட்டுநா், சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், வாகன உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் அளிக்க வேண்டியது வழக்கின் விசாரணை அதிகாரியின் முக்கிய கடமையாகும்.

வெவ்வேறு நீதிமன்றங்களில் பதிவாகிய ஒரே விபத்து தொடா்பான வழக்குகளை ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய பாதிக்கப்பட்டவா்கள் முறையிட வேண்டிய அவசியம் இல்லை.

இதற்காக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த வலைதளத்தை உருவாக்குவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

நகர அளவிலான காவல் நிலையங்களில் வரையில் வாகன விபத்து காப்பீடு வழக்குகளை கையாள சிறப்புப் பிரிவை மூன்று மாதங்களில் ஏற்படுத்த அனைத்து மாநில உள்துறை அமைச்சங்கங்களும் காவல் துறை தலைவா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com