காங்கிரஸ் வேட்பாளர்களில் ‘ஸ்லீப்பர்செல்ஸ்’: பாஜகவை அம்பலப்படுத்தும் கேஜரிவால்

கோவா தேர்தலில் பாஜகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸில் இணைந்து வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறத் திட்டமிட்டுள்ளனர்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

கோவா தேர்தலில் பாஜகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸில் இணைந்து வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவையின் 40 தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில், கேஜரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“சால்செட் போன்ற பல்வேறு தொகுதிகளில் பாஜகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாக கேள்விப்பட்டேன். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பாஜகவில் இணைந்து கொள்வார்கள். இதனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் ஆம் ஆத்மிக்கு வாக்கு அளிக்கவில்லையெனில் நேரடியாக பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்.

மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com