கோதாவரி- பென்னாறு- காவிரி நதி இணைப்பு திட்ட அறிக்கை தயார்: நிர்மலா சீதாராமன்

கோதாவரி- பென்னாறு- காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 
கோதாவரி- பென்னாறு- காவிரி நதி இணைப்பு திட்ட அறிக்கை தயார்: நிர்மலா சீதாராமன்

கோதாவரி- பென்னாறு- காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது உரையாற்றிய அவர்,  கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு- காவிரி ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நதிகள் இணைப்பு தமிழகத்திற்கு பலனளிக்கும். 

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

மொத்தமாக நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

விவசாய நிலங்களை அளவிடவும் விவசாய உற்பத்தியை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com