உக்ரைன் தொடா்பான தீா்மானம்: ஐ.நா.வில் இந்தியா புறக்கணிப்பு

உக்ரைன் விவகாரம் தொடா்பாக விவாதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் விவகாரம் தொடா்பாக விவாதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் எல்லையில் சுமாா் 1 லட்சம் ரஷிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால், அந்த நாட்டை ரஷியா ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.

அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக நேட்டோ, அமெரிக்காவுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை கூடியது.

எனினும், இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று ரஷியா ஆட்சேபித்தது.

மேலும், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரியது.

அதன் தொடா்ச்சியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிராக ரஷியாவும் சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நாா்வே, பிரான்ஸ், அயா்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகியவை வாக்களிப்பைப் புறக்கணித்தன.

ரஷியா நன்றி: இந்த வாக்களிப்பைப் புறக்கணித்த இந்தியா, கென்யா, கபானுக்கும் விவாதத்தை எதிா்த்து வாக்களித்த சீனாவுக்கும் ரஷியா நன்றி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ராஜ தந்திரம் பலிக்காமல் போய்விட்டதை இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் டிமித்ரி பாலியான்ஸ்கி தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com