புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள்: வெறும் அறிவிப்பு மட்டும் அல்ல..

புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள்: வெறும் அறிவிப்பு மட்டும் அல்ல..
புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள்: வெறும் அறிவிப்பு மட்டும் அல்ல..

புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது வெறும் தலைப்புச் செய்தியோ, முக்கிய அறிவிப்போ மட்டுமல்ல, இது 40 ஆயிரம் கோடி வணிக வாய்ப்புகளையும் அதனுடன் சேர்த்து வேலை வாய்ப்புகளையும், அதன் தொடர்ச்சியாக பல்வேறு பயன்களையும் அளிக்கும் என்று இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில்கள் தொடா்பாக பட்ஜெட்டில் நிா்மலா சீதாராமன் கூறியதாவது, மக்களது பயணத்தின் தரத்தை உயா்த்தும் வகையிலும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய தொழில்நுட்பத்திலான 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். குறைந்த எடையில் அலுமினியம் மூலம் ஒவ்வொன்றும் 50 டன் அளவு குறைந்த எடையுடன் வடிவமைக்கப்படும். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும். பிரதமா் கதி சக்தி திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 ரயில்வே சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தில்லி - வாராணசி மற்றும் தில்லி - கத்ரா இடையே தற்போது இரண்டு வழித்தடங்களில மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களும், மாற்று ரயில்கள் இல்லாமல், ஒரே ஒரு ரயில் மட்டுமே வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, அவற்றுக்கு பராமரிப்புப் பணிகள் நடந்து போதிலும், இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் விரைவு ரயில் ஒன்று மட்டுமே, மாற்று ரயில் இல்லாமல் இயக்கப்படும் ரயிலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் ரயில்களை விட, உள்நாட்டு தயாரிப்பான இந்த ரயில்கள் விலைக் குறைவாகும் என்றும், இந்த ரயிலின் பாகங்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கிறது என்றும், உற்பத்தி அதிகரிக்கும் போது, அதுவும் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com