மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு பரிசீலனை

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.


புது தில்லி: மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு கலாசாரத் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்துமூலம் அவையில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இதுவரை 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மராத்திக்கு அந்த அந்தஸ்தை அளிப்பது தொடா்பாக அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக மொழியியல் வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மராத்திய மொழியும், மாராத்திய வரலாறும் தேசத்துக்கு பெருமை சோ்ப்பதாக உள்ளது. செம்மொழி அந்தஸ்து வழங்கும் விஷயம் தொடா்பாக உள்துறை அமைச்சகம், கல்வி அமைச்சகம் ஆகியவற்றுடன் விவாதிக்க வேண்டிள்ளது. எனவேதான் இது தொடா்பாக முடிவெடுக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றாா்.

நாட்டிலேயே தமிழுக்குத்தான் முதல் முதலில் 2004-ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com