நினைக்க மறந்த கதை: ராஜஸ்தான் முன்களப் பணியாளர்களின் பரிதாப நிலை

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் 5 மாதங்களாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை.
நினைக்க மறந்த கதை: ராஜஸ்தான் முன்களப் பணியாளர்களின் பரிதாபம்
நினைக்க மறந்த கதை: ராஜஸ்தான் முன்களப் பணியாளர்களின் பரிதாபம்


ஹனுமன்கார்: நாட்டில் கடந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியபோது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இன்னமும் ஊதியம் வழங்கப்படவில்லை.

அவர்கள் யாருக்கு தங்கள் பணி தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும். தங்களது பணி என்ன என்பதும், தங்களது எதிர்காலம் என்ன என்பதும் தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

ரசுவாலா கிராமத்தில் கரோனா இரண்டாம் அலையின் போது கடுமையான மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். அப்போது அரசு தரப்பில் 7,900 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்கிறார் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய துருவ் பிஷ்னோய்.

இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளரிடம் கேட்டால், கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்கச் சொன்னார். அங்குச் சென்று கேட்டதற்கு, இதுவரை எங்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு சார்பில் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்று பதில் கூறுகிறார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கானோர், கடந்த ஐந்து மாதங்களாக, ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் முன்களப் பணியாளர்கள்.

கடந்த மே மாதம் நாட்டில் கரோனா அலையின் போது, ராஜஸ்தானில் 1000 மருத்துவர்களும், 25,000 செவிலியர்களும், பணியமர்த்தப்பட்டு, வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

சுமார் 5 மாதங்களுக்கு மேலாகியும், அவர்களுக்கு இன்னமும் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது அவர்கள் தங்களது வேலைக்கான ஊதியம் கோட்டு, போராட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.

முன்களப் பணியாளர்கள் என்றும், உயிர் காத்தவர்கள் என்றும் இரண்டாம் அலையின்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய இவர்களை காலமெல்லாம் வைத்துக் கொண்டாடிக் கொண்டே இருக்காவிட்டாலும், இவர்கள் செய்த வேலைக்கான ஊதியத்தையாவது அரசு உடனடியாக வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இவர்களிடம் சிகிச்சை பெற்று இப்போது உயிருடன் வாழும் ராஜஸ்தான் மக்களின் கோரிக்கையாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com