வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவி விற்பனை அதிகரிப்பு

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவியின் விற்பனை அருணாச்சலில் அதிகரித்திருப்பது மாநில அரசை கவலையடையச் செய்துள்ளது.
வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவி விற்பனை அதிகரிப்பு
வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவி விற்பனை அதிகரிப்பு


விஜயவாடா: நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யும் கருவியின் விற்பனை பல்வேறு மாநிலங்களில் அதிகரித்திருப்பது மாநில அரசுகளை கவலையடையச் செய்துள்ளது.

சில இடங்களில், சட்டவிரோதமாகவும், உரிமம் இன்றியும், இந்த கரோனா பரிசோதனை கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவிகளின் செயல்முறை இன்னமும் விவாதத்திலேயே உள்ளது. ஆனால், ஆன்லைன் மூலம் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் அதனை எந்த அறிவுறுத்தல் தகவல்களும் இன்றி விற்பனை செய்து வருகின்றன.

பலரும், இதனை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், உரிமம் பெற்ற நபர்களிடமிருந்துதான் இதனை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com