5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகள் கொள்முதல்: மத்திய அரசு முடிவு

பயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகளை தலா ரூ.145-க்கு வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகள் கொள்முதல்
5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகள் கொள்முதல்

பயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகளை தலா ரூ.145-க்கு வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஹைதராபாதை சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தயாரித்தது. கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகியவற்றுக்குப் பிறகு முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-ஆவது கரோனா தடுப்பூசி, கோா்பிவேக்ஸ்.

அத்தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், பயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளை தலா ரூ.145-க்கு (வரிகள் தனி) கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளை நடப்பு மாதத்திலேயே பயாலஜிகல்-இ நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கும் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தடுப்பூசி கொள்முதலுக்காக ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் தற்போது 15 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோா் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை (3-ஆவது தவணை) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

15 வயதுக்குக் குறைவான சிறாா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிப்பது தொடா்பாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி பெறத் தகுதியானவா்களின் பட்டியலை விரிவுபடுத்துவது தொடா்பாகவும் மத்திய அரசு சாா்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதைக் கடந்தோருக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com