இன்று முதல் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை: பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தன்னுடைய பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும், எந்த தொழிலும் செய்யப்போவதில்
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தன்னுடைய பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும், எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் புதிய வாக்குறுதியை அளித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்‍கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதனிடையே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்துக்‍கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக மீண்டும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார். முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பஞ்சாபில் தேர்தல் பிரசார வியூகத்தில் காங்கிரஸ் சில மாற்றங்களைச் செய்தது. அதன்படி, “சதா சன்னி, சதா முதல்வர்” என்ற  பிரசாரத்தை முன்னெடுக்க கட்சி இப்போது திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று முதல் தனது பெயரிலோ, தனது மனைவி பெயரிலோ எவ்வித சொத்தும் வாங்கவோ அல்லது வியாராம் போன்ற தொழிலோ செய்யப்போவதில்லை என்றும் சரண்ஜித் சிங் சன்னி வாக்குறுதி அளித்துள்ளார். 

சன்னியின் மருமகனை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்‍கத்துறை இயக்குநரகம் கைது செய்ததைத் தொடர்ந்து, தம் மீதான எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்‍கு பதிலளிக்‍கும் விதமாக சொத்து வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று  தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ராகுல் காந்திக்கும், ஒட்டுமொத்த கட்சித் தலைமைக்கும் நன்றி தெரிவித்த சன்னி, "பஞ்சாப் தேர்தல் ஒரு பெரிய போர் மற்றும் வேலை, அந்த போரில் என்னால் தனியாக வெல்ல முடியாது. இந்த தேர்தலில் போரில் வெல்ல பணமும், தைரியமும் என்னிடம், இல்லை. ஆனால் மக்கள் ஒவ்வொரு இந்த போரை எதிர்கொள்வார்கள், பின்னர் அது வெற்றிபெறும்" என்று சன்னி கூறியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com