உ.பி. தேர்தல்: 11 மணி நிலவரப்படி 20.03% வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்
மதுரா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று (வியாழக்கிழமை)  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

இன்று முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டடுள்ளது. 

இதில், அதிகபட்சமாக ஷாம்லி தொகுதியில் 22.83% வாக்குகளும், ஹாபூா் தொகுதியில் 22.80% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com