அவர நினைச்சா பயம் வரல...சிரிப்புதான் வருது: ராகுல் காந்தி கிண்டல்

"பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தனது உரையில், காங்கிரஸ் குறித்து பேசுவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவழித்தார். ஆனால் சீனா குறித்த எனது கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை"
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் மங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் நேர்காணலை கடுமையாக விமரிசித்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல், "மோடி அளித்த நேர்காணலில் ராகுல் சொல்வதை கேட்டு கொள்ள மறுக்கிறார் எனக் கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் தரப்படும் அழுத்தம் ராகுல் காந்தியை ஒன்னும் செய்யாது என்பதுதான். நரேந்திர மோடிக்கு நான் பயப்படவில்லை. அவருடைய திமிர் என்னை சிரிக்கத்தான் வைக்கிறது.

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தனது உரையில், காங்கிரஸ் குறித்து பேசுவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவழித்தார். ஆனால் சீனா குறித்த எனது கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. நான் சொல்வதைக் ராகுல் கேட்கவில்லை. நான் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அவர் பின்வாங்குவதில்லை. அவன் கேட்பதில்லை என மோடி கூறியுள்ளார்.

நான் ஏன் கேட்க வேண்டும்? நரேந்திர மோடி, நோட்டுகளை தடை செய்ததன் மூலமாகவும், தவறான ஜிஎஸ்டி மூலமாகவும் இந்தியாவின் சிறு வணிகர்கள், நடுத்தர வணிகங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை சீரழித்துள்ளார். 

முன்னதாக நேர்காணலில் பேசிய மோடி, "சில விஷயங்களில், நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் விரிவான பதில்களை அளித்துள்ளன. தேவையான இடங்களில் நானும் பேசியுள்ளேன். கேட்காமல், சபையில் உட்காராத ஒருவருக்கு நான் எப்படி பதில் சொல்வது?" எனக் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com