கரோனாவுக்கு மத்தியிலும் ஜிடிபி-ல் வேளாண் ஏற்றுமதியின் பங்கு அதிகரிப்பு

கரோனாவுக்கு மத்தியிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு மத்தியிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையின் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் எழுத்து மூலம் பதில் அளித்தாா். அதில் மேலும் கூறியிருப்பதாவது:

2019-20-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேளாண் ஏற்றுமதி ரூ.2,52,297 கோடியாக இருந்தது. இது நடப்பு விலைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2 சதவீதமாகும். கரோனா பெருந்தொற்றுக்கிடையில் 2020-21-ல் வேளாண் ஏற்றுமதி 22.8 சதவீதம் அதிகரித்து ரூ.3,09,939 கோடியாக இருந்தது. இது ஜிடிபி-ல் 1.6 சதவீதம் ஆகும்.

நவீன உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கவும், உணவு உற்பத்தியை மேம்படுத்தவும், மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதமா் கிசான் சம்பாத யோஜனா என்னும் திட்டத்தை 2016-17 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதமா் குறு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வணிக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் ஒரு மாவட்டம், ஒரு பொருள் அணுகுமுறையை பின்பற்றி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com