உலகத் தரம் வாய்ந்த 3-வது ரயில்நிலையமாக மாறவிருக்கும் பெங்களூரு

ஒரு சில புகைப்படங்களை மட்டும் பார்த்தால், இது விமான நிலையமோ என்று சந்தேகிக்கப்படும் வகையில், பெங்களூருவில் உள்ள எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலைய சந்திப்பு உருவாகிவருகிறது.
உலகத் தரம் வாய்ந்த 3-வது ரயில்நிலையமாக மாறவிருக்கும் பெங்களூரு
உலகத் தரம் வாய்ந்த 3-வது ரயில்நிலையமாக மாறவிருக்கும் பெங்களூரு


புது தில்லி: ஒரு சில புகைப்படங்களை மட்டும் பார்த்தால், இது விமான நிலையமோ என்று சந்தேகிக்கப்படும் வகையில், பெங்களூருவில் உள்ள எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலைய சந்திப்பு உருவாகிவருகிறது.

இதன் மூலம், நாட்டின் உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை வென்றெடுக்க, இந்த ரயில் நிலையச் சந்திப்பு தயாராக உள்ளது. வரும் மார்ச் மாதத்தில், இந்த ரயில் நிலையம் திறப்பு விழாக் காணவிருக்கிறது.

முன்னதாக, குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையம், உலகத்தரம் வாய்ந்த முதல் ரயில் நிலையமாகவும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

விரைவில் அயோத்தியோ, சஃப்தர்ஜங்க், பிஜ்வாசன், கோமதிநகர், அஜ்னி ஆகியவையும் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக சீரமைக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com