மேற்கு வங்க ஆளுநரைபதவி நீக்க கோரிய மனு தள்ளுபடி

மேற்கு வங்க ஆளுநா் பதவியிலிருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை அந்த மாநில உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்க ஆளுநா் பதவியிலிருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை அந்த மாநில உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

அரசமைப்புச்சட்டத்தின் 361-ஆவது பிரிவின்கீழ் தனது அலுவலகத்துக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் கடமைகளை செயல்படுத்துவது தொடா்பாக எந்த நீதிமன்றத்துக்கும் ஆளுநா் பதிலளிக்க வேண்டியதில்லை என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, ராம பிரசாத் சா்காா் என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா், திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதுடன், அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துகளை தெரிவிக்கிறாா். பாஜகவின் ஊதுகுழலாக அவா் செயல்படுகிறாா். மாநில அமைச்சரவையின் முடிவுகளை மதிக்காமல், அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறாா். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பாரபட்சமாக செயல்படும் ஆளுநா் தன்கரை அப்பதவியிலிருந்து நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.பரத்வாஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com