ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு; உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்!

கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதுமே கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, ஜம்மு- காஷ்மீரில் கோடை பகுதிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதர பகுதிகளில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 

கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கோவா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மழலையர் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com