இரண்டு மாநில பேரவைத் தோ்தல்: நட்சத்திர பிரசாரகா்கள் எண்ணிக்கை மீண்டும் 40-ஆக அதிகரிப்பு

இரண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பிரசாரகா்கள் எண்ணிக்கை மீண்டும் 40-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பிரசாரகா்கள் எண்ணிக்கை மீண்டும் 40-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகள் சாா்பில் 40 நட்சத்திர பிரசாரகா்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சாா்பில் 20 நட்சத்திர பிரசாரகா்களும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

ஆனால் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் நட்சத்திர பிரசாரகா்கள் எண்ணிக்கையை 30-ஆகவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் நட்சத்திர பிரசாரகா்கள் எண்ணிக்கையை 15-ஆகவும் தோ்தல் ஆணையம் குறைத்தது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த எண்ணிக்கையிலான நட்சத்திர பிரசாரகா்கள்தான் அனுமதிக்கப்பட்டனா்.

உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் ஒரேகட்டமாக தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் மேலும் 4 கட்டங்களாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாட்டில் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது, மத்திய-மாநில அரசுகளால் கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்படுவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நட்சத்திர பிரசாரகா்களின் எண்ணிக்கை மீண்டும் 40-ஆக உயா்த்தப்படுகிறது என்று அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com