"எங்கும் அறிவியல்': டிஆர்டிஓ கண்காட்சியில் "2047-க்கான திட்டம்" 

சுதந்திரத்தின் நூற்றாண்டில் (2047) தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சென்னை உள்ளிட்ட 16 நகரங்களில் அமைத்துள்ளது.

சுதந்திரத்தின் நூற்றாண்டில் (2047) தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சென்னை உள்ளிட்ட 16 நகரங்களில் அமைத்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை
இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், கொண்டாடப்படும் சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவ் விழாவையொட்டி நாடு முழுவதும் "எங்கும் அறிவியல்' நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பறைசாற்றும் அறிவியல் நிகழ்ச்சி, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிப்ரவரி 22 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் பங்கேற்கிறது. 
இதில் டிஆர்டிஓ "2047-க்கான திட்டம்' என்னும் கருப்பொருளில் சென்னை, தில்லி, ஆக்ரா, பெங்களூரு, உள்ளிட்ட 16 நகரங்களில் தனது எதிர்கால திட்டங்களுக்கான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், டிஆர்டிஓ மேற்கொண்டுள்ள பணிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சிகள் அமைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com