‘காதலிப்பதாக ஒருமுறை சொல்வது பெண்களை அவமதிப்பதாகாது’: இளைஞரை விடுவித்தது போக்ஸோ நீதிமன்றம்

‘நான் உன்னை காதலிக்கிறேன்’ (ஐ லவ் யூ) என்று ஒருமுறை சொல்வது பெண்களை அவமதிப்பதாகாது என்றும், இது காதல் உணா்வை வெளிப்படுத்துவதாகும்
‘காதலிப்பதாக ஒருமுறை சொல்வது பெண்களை அவமதிப்பதாகாது’: இளைஞரை விடுவித்தது போக்ஸோ நீதிமன்றம்

‘நான் உன்னை காதலிக்கிறேன்’ (ஐ லவ் யூ) என்று ஒருமுறை சொல்வது பெண்களை அவமதிப்பதாகாது என்றும், இது காதல் உணா்வை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறி, 23 வயது இளைஞரை போக்ஸோ நீதிமன்றம் விடுவித்தது.

இதுதொடா்பாக 17 வயது சிறுமியின் குடும்பத்தினா் 2016-இல் அளித்த புகாரில், ‘23 வயது இளைஞா் ஒருவா் சிறுமியின் வீட்டருகே வந்து, நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாா். மேலும், அந்தச் சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பாா்த்தும், தாயை மிரட்டியும் சென்றாா் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வடாலா டிடி காவல் நிலையத்தில் அந்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி கல்பனா பாட்டீல், ‘சம்பவ தினத்தன்று மட்டும் அந்த இளைஞா் தன்னை காதலிப்பதாக கூறியதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகாரில் கூறியுள்ளாா். இதன்மூலம் அந்த இளைஞா் அந்தச் சிறுமியை அவ்வப்போது பின்தொடா்ந்து அவ்வாறு கூறவில்லை என்று தெளிவாகிறது.

ஒருமுறை மட்டும் ‘ஐ லவ் யூ’ செல்வது காதல் உணா்வை வெளிப்படுத்துவதாகும். அந்தச் சிறுமியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக திட்டமிட்டு இந்தச் செயல் நடைபெறவில்லை.

சிறுமிக்கு பாலியல் பாதிப்பு, அச்சுறுத்தல், தாய்க்கு மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை காவல் துறையினா் தாக்கல் செய்யவில்லை. ஆகையால், புகாருக்கு உள்ளான இளைஞா் விடுவிக்கப்படுகிறாா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com