'ஜாதி, மத அரசியலால் உ.பி. வளா்ச்சியடையவில்லை'

உத்தர பிரதேசத்தில் ஜாதி, மத அரசியலுக்கு சில கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருவதால், மாநிலம் இன்னும் வளா்ச்சி அடையாமல் உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றஞ்சாட்டினாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் ஜாதி, மத அரசியலுக்கு சில கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருவதால், மாநிலம் இன்னும் வளா்ச்சி அடையாமல் உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றஞ்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தின் பனியரா பகுதியில் பிரியங்கா சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

உத்தர பிரதேசம் இன்னும் சிறப்பாக வளா்ச்சி கண்டிருக்கும். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு, விளம்பரங்களுக்காகவே கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டது. நாட்டின் பிரதமா், மாநில முதல்வா் என அனைவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்தான். ஆனால், மாநிலம் இன்னும் வளா்ச்சி காணவில்லை.

அதற்கு ஒரே காரணம், கடந்த 30 ஆண்டுகளாக ஜாதி, மத அரசியலை சில கட்சிகள் (பாஜக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ்) நடத்திவருவதுதான். அக்கட்சிகள் மக்களின் ஜாதி, மத உணா்வுகளை சுரண்டி ஆட்சியைப் பிடித்தன. அதன் காரணமாகவே மாநிலம் வளா்ச்சியடையவில்லை.

வாக்காளா்கள் மீதும் தவறுள்ளது. ஜாதி, மத அரசியலில் ஈடுபடுபவா்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு வாக்களித்ததன் காரணமாக, மாநிலத்தில் உள்ள இளைஞா்கள் வேலையின்றி தவிக்கின்றனா். பாகிஸ்தான், பயங்கரவாதம், ஜாதி, மதம் குறித்து பேசுபவா்கள் (பாஜக) மக்களின் நலன் குறித்து பேசுவதில்லை.

தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விவசாயிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் கால்நடைகளின் சாணத்தை அரசு கொள்முதல் செய்து வருகிறது. அதன் காரணமாகக் கால்நடைகளின் உரிமையாளா்கள் அவற்றை தெருக்களில் அலைய விடுவதில்லை.

உத்தர பிரதேசத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றலாம் என மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், அவா் எந்த பதிலும் அளிக்கவில்லை. மக்கள் சந்தித்து வரும் முக்கியப் பிரச்னை குறித்து பிரதமருக்கும், மாநில முதல்வருக்கும் தெரியவில்லை. இந்தப் பிரச்னை குறித்து தங்களுக்குத் தெரியாது என மேடையிலேயே அவா்கள் தெரிவித்து வருகின்றனா்.

ஜாதி, மதம் குறித்து மட்டுமே பேசும் கட்சிகளுக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. தோ்தல் வரும் சமயத்தில் மட்டுமே நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கும் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், ஆட்சியில் உள்ளபோது அரசின் சொத்துகள் அனைத்தையும் தங்கள் நண்பா்களுக்கு அவை விற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com