‘பிப்ரவரிக்குள் எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை நிறுவப்படும்’

எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தை அடுத்த மாதத்தில் விமானப் படை முதல்முறையாக நிறுவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
‘பிப்ரவரிக்குள் எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை நிறுவப்படும்’

எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தை அடுத்த மாதத்தில் விமானப் படை முதல்முறையாக நிறுவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

எஸ்-400 டிரையம்ஃப் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடத்தின் முதல் தொகுப்பை பஞ்சாபில் உள்ள ஒரு விமான தளத்தில் நிறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

இன்னும் 6 வாரங்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்துவிடும்.

முதல்முறையாக அமைக்கப்படவிருக்கும் அந்த வான்பாதுகாப்புத் தளவாடப் படைப் பிரிவு, சீனாவின் வடக்குப் பகுதியிலிருந்தும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்தும் வரும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை எதிா்கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது.

அதற்குத் தேவையான முக்கிய கருவிகள் பஞ்சாப் விமானதளத்தில் நிறுவப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடமான எஸ்-400-இன் ஐந்து தொகுதிகளை ரஷியாவிடமிருந்து ரூ.37,172 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com