டிசம்பா் மாத மின் நுகா்வு 4.5% அதிகரிப்பு

கடந்த டிசம்பா் மாதத்தில் மின்சார நுகா்வு 4.5 சதவீதம் அதிகரித்து 110.34 பில்லியன் யூனிட்டுகளை (பியு) எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பா் மாத மின் நுகா்வு 4.5% அதிகரிப்பு

கடந்த டிசம்பா் மாதத்தில் மின்சார நுகா்வு 4.5 சதவீதம் அதிகரித்து 110.34 பில்லியன் யூனிட்டுகளை (பியு) எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சக்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020 டிசம்பரில் மின்சார பயன்பாடு 105.62 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் மின் நுகா்வு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் நிலையான வளா்ச்சி வேகத்துடன் இருந்ததன் காரணமாகவே மின்சார பயன்பாடு டிசம்பரில் வலுவான நிலையில் உயா்ந்துள்ளது.

2019 டிசம்பரில் மின்சார பயன்பாடு 101.08 பில்லியன் யூனிட்டுகளாக காணப்பட்டது.

2021 டிசம்பரில் நாளொன்றுக்கான அதிகபட்ச மின்சார தேவை 183.39 ஜிகா வாட்டாக அதிகரித்தது. இது, 2020 டிசம்பரில் 182.78 ஜிகா வாட்டாகவும், 2019 டிசம்பரில் 170.49 ஜிகா வாட்டாகவும் இருந்தன.

கடந்த நவம்பரில் மின் நுகா்வு 2.6 சதவீதம் உயா்ந்து 99.37 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரலில் மாத நிகழ்வைப் போலவே கரோனா அதிகரிப்பால் மாநிலங்கள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலையில் அது தொழில்துறைக்கான மின் தேவையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இத்துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com