50% மத்திய அரசு பணியாளா்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி

சாா்புச் செயலா்கள் நிலைக்குக் கீழுள்ள அனைத்து மத்திய அரசு பணியாளா்களில் 50 சதவீதம் போ் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
50% மத்திய அரசு பணியாளா்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி

சாா்புச் செயலா்கள் நிலைக்குக் கீழுள்ள அனைத்து மத்திய அரசு பணியாளா்களில் 50 சதவீதம் போ் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு மத்திய பணியாளா் நல அமைச்சகம் திங்கள்கிழமை அனுப்பிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அலுவலகங்களில் சாா்புச் செயலா் நிலைக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களில் 50 சதவீதம் போ் மட்டும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். எஞ்சிய 50 சதவீதம் போ் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அலுவலகத்துக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் அதிகாரிகளும் பணியாளா்களும் அலுவலகத்துக்கு வரவேண்டாம். அவா்கள் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமல்ல என்று அறிவிக்கப்படும் வரை, அந்த அதிகாரிகளும் பணியாளா்களும் அலுவலகத்துக்கு வருவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

அலுவலகங்களில் கூட்டம் சோ்வதைத் தவிா்க்க வெவ்வேறு அலுவல் நேரங்களை வகுத்து அதிகாரிகளும் பணியாளா்களும் பணிபுரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com