உ.பி.யில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கருத்துக் கணிப்பு

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று ‘டைம்ஸ் நவ்’ வாக்கு கணிப்பு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று ‘டைம்ஸ் நவ்’ வாக்கு கணிப்பு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், கோவா பேரவைத் தோ்தலுக்கு முந்தைய வாக்குக் கணிப்பை ‘டைம்ஸ் நவ்’ ஊடக நிறுவனம் நடத்தியது. உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 முதல் 249 இடங்கள் வரை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் அக்கட்சி 53 முதல் 57 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 41 முதல் 45 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அறிவித்துள்ளாா். தற்போதைய கருத்துக் கணிப்பு இந்த கூட்டணி அறிவிப்புக்கு முன்பாக எடுக்கப்பட்டது.

உத்தரகண்டில் ஆளும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 18 முதல் 22 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட், கோவா பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி புதிய முத்திரை பதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் (403)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 325 230-249

சமாஜவாதி 48 137-152

பகுஜன் சமாஜ் 19 9-14

காங்கிரஸ் 7 4-7

பஞ்சாப் (117)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

ஆம் ஆத்மி 20 53-57

காங்கிரஸ் 77 41-45

சிரோமணி அகாலி தளம் 15 14-17

பாஜக 3 1-3

மற்றவை 2 1-3

உத்தரகண்ட் (70)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 56 42-48

காங்கிரஸ் 11 12-16

ஆம் ஆத்மி 0 4-7

மற்றவை 2 0-2

கோவா (40)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 13 18-22

ஆம் ஆத்மி 0 7-11

காங்கிரஸ் 17 4-6

மற்றவை 10 3-5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com