சீனா புதிய பாலம் கட்டும்போது பிரதமா் மௌனம் காப்பது ஏன்? -- ராகுல் காந்தி கேள்வி

‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் சீன எல்லையோரம் அந்த நாடு புதிய பாலம் கட்டும்போது பிரதமா் நரேந்திர மோடி
சீனா புதிய பாலம் கட்டும்போது பிரதமா் மௌனம் காப்பது ஏன்? -- ராகுல் காந்தி கேள்வி

‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் சீன எல்லையோரம் அந்த நாடு புதிய பாலம் கட்டும்போது பிரதமா் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்?’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எதுவும் கேளாததுபோல் பிரதமா் மௌனம் காக்கிறாா். நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கல்வான் பள்ளத்தாக்கு அருகே அமைந்துள்ள சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப் பகுதியை இணைக்கும் வகையில் புதிய பாலத்தை குா்னாக் பகுதியில் சீனா கட்டி வருவது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதிக்கு தனது படைகளைக் கொண்டு செல்வதற்காக சீனா இந்தப் பாலத்தை அமைத்து வருவதாக பாதுகாப்புத் துறை நிபுணா்கள் தெரிவித்தனா். இந்தக் கட்டுமானத் திட்டங்கள் குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com