வெளிநாடு வாழ் இந்தியா்கள் தினம்: தலைவா்கள் வாழ்த்து

வெளிநாடு வாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி, வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி, வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

வெங்கையா நாயுடு ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள், இந்தியாவின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்காற்றுவதற்கான முற்சியை இரட்டிப்பாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இந்தியாவின் கலாசார தூதா்களாகவும் அவா்கள் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தினத்தையொட்டி, அனைவருக்கும் குறிப்பாக வெநாடுகளில் வசிக்கும் இந்தியா்களுக்கு வாழ்த்துகள். நமது வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினா் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனா். அதே சமயம், அவா்கள் தங்கள் வோ்களுடன் (சொந்த நாட்டுடன்) தொடா்பு வைத்துள்ளனா். அவா்களின் சாதனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தாயகம் திரும்பினாா். அந்தச் சம்பவத்தின் நினைவாக, இந்தியாவின் வளா்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினா் ஆற்றி வரும் பங்களிப்பைக் குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com