‘பஞ்சாப் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றிருந்தால் வரலாறு காணாத கூட்டமாக மாறியிருக்கும்’

பஞ்சாப் அரசியல் வரலாறு காணாத கூட்டமாக பெரோஸ்பூர் பேரணி அமைந்திருக்கக்கூடும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கஜேந்திர சிங் ஷெகாவத்
கஜேந்திர சிங் ஷெகாவத்

பஞ்சாப் அரசியல் வரலாறு காணாத கூட்டமாக பெரோஸ்பூர் பேரணி அமைந்திருக்கக்கூடும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் இன்று மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் பேசுகையில்,

“பஞ்சாப்பில் நடந்த அரசியல் பொதுக் கூட்டங்களிலேயே, பெரோஸ்பூர் கூட்டம் மிகப் பெரியதாக அமைந்திருக்கும். ஆனால், அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை மட்டுமல்ல, பிரதமரைக் கூட பொதுக் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இது பாஜக தொண்டர்களை மேலும் பலப்படுத்தும்.”

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் பெரோஸ்பூரில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லும்போது, வழியில் போராட்டம் நடைபெற்றதால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பாதி வழியிலேயே திரும்பி தில்லிக்குச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரின் வழியில் போராட்டம் நடைபெற்றது எங்களுக்கு தெரியாது. பிரதமருக்கு எவ்வித பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படவில்லை. பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் 70ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது, ஆனால் 700 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதனால், நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கக்கூடும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com