முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை பிப்.2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனு மீதான விசாரணையை பிப்ரவரி 2-ஆவது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை பிப்.2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனு மீதான விசாரணையை பிப்ரவரி 2-ஆவது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக, கேரள அரசுகளின் வழக்குரைஞர்கள், வேறு பல மனுதாரர்களின் வழக்குரைஞர்களும் ஆஜராகினர்.
 அப்போது, நீதிபதி அமர்வு கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், நீதிமன்றத்தால் தீர்க்கக்கூடிய முக்கியப் பிரச்னைகளைக் கண்டறிவதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உதவ வேண்டும். மேலும், முக்கிய விவரங்களைக் கண்டறிவதற்கான கூட்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஒத்திசைவான விவகாரங்கள், கருத்து வேறுபாடு உள்ள விவகாரங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் (வழக்குரைஞர்கள்) நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளனர். அடுத்த வழக்கு விசாரணை வருவதற்கு முன்பாக, நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
 இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு தொடர்பான புள்ளிவிவரங்கள் கோரும் விவகாரத்தை வழக்குரைஞர்களில் ஒருவர் எழுப்பினார்.
 அப்போது, இந்த வழக்கு நடைமுறைகளில் நீதிமன்றம் தீர்க்க வேண்டிய முக்கிய விவகாரங்கள் என்ன என்பது குறித்து முதலில் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியுள்ளது. அணையில் உள்ள நீர் அளவை நிர்வகிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு உள்ளது. அணையின் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரமும் இந்தக் குழு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு எதிரான மனு அல்ல. இது அணையைச் சுற்றி வாழக் கூடியவர்களின் உயிர், உடைமை, சுகாதார விவகாரங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பொது நல மனுவாகும். ஆகவே, நீதிமன்றம் தரப்பில் நாங்கள் தீர்க்க வேண்டிய முக்கிய விவகாரங்களைக் கண்டறிவதில் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு உதவ வேண்டும். அணையை நிர்வகிப்பதற்கான பணியை மேற்கொள்ள நாங்கள் இங்கு அமரவில்லை' என்று நீதிபதிகள் அமர்வு வாய்மொழியாகக் கூறியது.
 இதையடுத்து, பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் எழுத்துபூர்வ குறிப்பைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 இந்த விசாரணையின்போது, முல்லைப் பெரியாறு அணை தொடர்புடைய மனுக்களுடன் சேர்ந்து மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கான முன்மொழிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு விவகாரமும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த மனுவை தனி விவகாரமாக விசாரிக்க வேண்டுமென்று மேக்கேதாட்டு விவகாரம் தொடர்புடைய தரப்பினர் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரம் இந்த மனுக்கள் பட்டியலில் இருந்து பிரிக்கப்படும். இந்த வழக்கு ஜனவரி 25-ஆம் தேதி விசாரிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com