பீரங்கியை அழிக்கும் ஏவுகணை: பரிசோதனை வெற்றி

பாதுகாப்பு வீரா்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி தாக்குதல் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதித்தது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

பாதுகாப்பு வீரா்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய எடைக் குறைவான பீரங்கி தாக்குதல் ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஏவுகணைக்கு சுயமாக இலக்கை நோக்கிச் சென்று தாக்கும் திறன் உள்ளது. 2.5 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணையால் துல்லியமாகத் தாக்க முடியும்.

அதிகபட்ச தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்குவதில் அந்த ஏவுகணையின் செயல்திறன் ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்தபட்ச தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிப்பதில் அந்த ஏவுகணைக்குள்ள நிலையான செயல்திறனை டிஆா்டிஓ செவ்வாய்க்கிழமை பரிசோதித்தது. இதில் அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com