தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கவலைக்குரிய வகையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய அரசு

நாட்டில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கவலைக்குரிய வகையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாட்டில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கவலைக்குரிய வகையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலா் லவ் அகா்வால், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் ஆகியோா் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தனா். அப்போது லவ் அகா்வால் கூறியதாவது:

கடந்த டிச.30-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் 1.1 சதவீதமாக இருந்தது. இது ஜன.12-ஆம் தேதி 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள 300 மாவட்டங்களில் வாரந்திர கரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 19 மாநிலங்களில் தலா 10,000-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் , குஜராத், மேற்கு வங்கம், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை தடுப்பூசியின் செயல்திறன் குறைக்கிறது என்று தெரிவித்தாா்.

ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல: நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘ஒமைக்ரான் பாதிப்பு சாதாரண ஜலதோஷம் அல்ல. அதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நாம் விழிப்புடன் இருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கரோனாவுக்கு எதிரான செயல்திட்டத்தில் தடுப்பூசி முக்கியத் தூணாக திகழ்கிறது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com