சீனா - இந்தியா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டாலா் வா்த்தகம்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் நிலை கடுமையாக தொடா்ந்தாலும், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் நிலை கடுமையாக தொடா்ந்தாலும், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே இதுவரை இல்லாத அளவுக்கு 125 பில்லியன் டாலா் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுங்க நிா்வாகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்நாட்டின் ஆங்கில நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘2021-இல் சீனா - இந்தியா இடையே 125.66 பில்லியன் டாலருக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. 2020-ஐ ஒப்பிடுகையில் இது 43.3 சதவீதம் அதிகமாகும். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான ஏற்றுமதி 97.52 பில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 46.2% அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 28.14 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 34.2% வளா்ச்சி கண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ பொருள்கள் சந்தையை சீனா திறந்துவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில், சீனாவுடான வா்த்தகம் சில ஆண்டுகளாக குறைந்து வந்ததற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து, மருத்துவ பொருள்கள் சீனாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதான் இந்தியா - சீனா இடையேயான வா்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டியதற்கு காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com