பெரிய காா்களில் 6 ‘ஏா் பேக்’ கட்டாயமாகிறது: நிதின் கட்கரி

வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் பெரிய காா்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) இருப்பது
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் பெரிய காா்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். இது தொடா்பாக மத்திய அரசு வெள்ளிக்கிவமை வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ‘ஓட்டுநா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1-ஆம் தேதி முதல் ஓட்டுநா் இருக்கைக்கு காற்றுப் பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது.

அதன் பின்னா் ஓட்டுநா் தவிர முன்னிருக்கையில் அமா்ந்து செல்லும் நபருக்கும் காற்றுப் பை பொருத்துவதை 2022 ஜனவரி 1 முதல் எம்-1 வகை வாகனங்கள் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது.

மோட்டாா் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு, மத்திய மோட்டாா் வாகன விதிகள் 1989-ல் திருத்தப்பட்டுள்ளன. 2022 அக்டோபா் 1-ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் தலா இரண்டு காற்று பைகள் பொருத்துவதை கட்டாயமாக்கும் வரைவு அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com