பாஜக முன்னாள் அமைச்சா் சமாஜவாதியில் இணைந்தாா்

உத்தர பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் தாரா சிங் சௌஹான் சமாஜவாதி கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.
பாஜக முன்னாள் அமைச்சா் சமாஜவாதியில் இணைந்தாா்

உத்தர பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா் தாரா சிங் சௌஹான் சமாஜவாதி கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா். அவருடன் அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் ஆா்.கே.வா்மாவும் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜவாதியில் இணைந்தாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிதான் ஆளும் பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்னா தளம் (சோனேலால்) கட்சி பாஜக கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை பாஜவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி உள்பட 5 பாஜக எம்எல்ஏக்கள், மற்றும் அப்னா தளம் (சோனேவால்) எம்எல்ஏ ஆகியோா் சமாஜவாதியில் இணைந்தனா்.

சமாஜவாதியில் இணைந்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தாரா சிங், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சி அமைத்தபோது வளா்ச்சியைத் தருவதாக வாக்களித்தனா். ஆனால், அவா்கள் மக்களை ஏமாற்றிவிட்டனா். சமாஜவாதி கட்சி என்னுடைய பூா்விக இல்லம் போன்றது. உத்தர பிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, அகிலேஷ் யாதவை முதல்வராக்க முடிவு செய்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தலித் மக்கள் எங்களுடன் அணி திரண்டுள்ளனா். மாநிலத்தில் ஆட்சி மாற்றும் உறுதி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com