பாஜகவில் இணைந்த முலாயமின் மருமகள்
பாஜகவில் இணைந்த முலாயமின் மருமகள்

குடும்பத்தில் குழப்பம்; பாஜகவில் இணைந்த முலாயமின் மருமகள்

அகிலேஷ் யாதவின் தம்பி மனைவி அபர்ணா பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.

பாஜகவிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில், முலாயமின் மருமகள் ஆளும் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ் யாதவின் தம்பி மனைவி அபர்ணா பாஜகவில் இன்று இணைந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக் யாதவின் மகள்தான் அபர்ணா. பாஜகவிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில், முலாயமின் மருமகள் ஆளும் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி அபர்ணா பாஜகவில் இணைவார் என பல நாள்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது. முன்னதாக, ஆளும் பாஜகவின் முக்கிய அமைச்சர்களான சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் சமீபத்தில் இணைந்தனர்.

அதேபோல், அமைச்சர்களை தொடர்ந்து வினய் சக்கியா, ரோஷன் லால் வர்மா, முகேஷ் வர்மா, பகவதி சாகர் ஆகிய பாஜக எம்எல்ஏக்களும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தனர். 

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், லக்னென கான்ட் தொகுதியில் போட்டியிட்ட அபர்ணா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக சார்பாக போட்டியிட்ட ரீதா பகுகுணா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார். கடந்த சில மாதங்களாகவே, மோடியை புகழும் வகையிலேயே அபர்ணா பேசிவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com