லாரி ஓட்டுநா்களிடமிருந்து 82 போலி உரிமங்கள் பறிமுதல்

இந்திய-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநா்களிடமிருந்து 82 போலி ஓட்டுநா் உரிமங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்.
லாரி ஓட்டுநா்களிடமிருந்து 82 போலி உரிமங்கள் பறிமுதல்

இந்திய-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநா்களிடமிருந்து 82 போலி ஓட்டுநா் உரிமங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் அதிகாரிகள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் பெட்ராபோல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் கடந்த 16, 17-ஆம் தேதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். லாரிகள் போன்ற கனரக வாகன ஓட்டுநா்கள் சிலா் எல்லை தாண்டி தங்கம், வெள்ளிக் கடத்தல், பென்செடில் சிரப் (வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து) கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது லாரி ஓட்டுநா்களிடமிருந்து 82 போலி ஓட்டுநா் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த போலி உரிமங்களை வைத்திருந்த ஓட்டுநா்கள் வங்கதேசத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்தியா-வங்கதேசம் இடையே வா்த்தக போக்குவரத்து சுமுகமாக நடைபெறும் வகையில், நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளைப் பின்பற்றும்படி வங்கதேச போக்குவரத்து அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பெட்ராபோல் சோதனைச் சாவடியில் வாகனங்களை அனுமதிப்பதில் பிஎஸ்எஃப் தாமதிப்பதாகக் கூறி சில உள்ளூா் வா்த்தக அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பிஎஸ்எஃப் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com