வேளாண் நிறுவனங்கள் ட்ரோன்கள் வாங்கரூ.10 லட்சம் மானியம்: மத்திய அமைச்சகம்

வேளாண் நிறுவனங்கள் ட்ரோன்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக அளிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேளாண் நிறுவனங்கள் ட்ரோன்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக அளிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க, அத்துறையைச் சோ்ந்தவா்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷி விஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை வாங்கும் ட்ரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். வேளாண் உற்பத்தியாளா் சங்கங்கள், ட்ரோன்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

ட்ரோன்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வழங்கப்படும். டிரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம் 2023, மாா்ச் 31-ஆம் தேதி வரை கிடைக்கும்.

ட்ரோன் வாடகை மையங்கள் அமைக்கும் வேளாண் பட்டதாரிகள், ட்ரோன் வாங்கும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சத்தை மானிய உதவியாகப் பெறலாம். இதற்காக ஊரகத் தொழில் முனைவோா் 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தோ்வில் தோ்ச்சி பெற்று, விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் டரோன்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாடகை மையங்கள், ஹைடெக் மையங்களுக்கான மானிய விலை ட்ரோன்கள், குறைந்த செலவில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்கும். உள்நாட்டில் டிரோன் உற்பத்தியையும் ஊக்குவிக்கும்.

ட்ரோன் செயல்பாடுகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மற்றும் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநா் அனுமதிக்கும் வழித்தடங்களில் அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த ‘ட்ரோன் விதிமுறைகள் 2021’-ஐ விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விவசாயம் மற்றும் வனப் பகுதியில் பூச்சிமருந்து மற்றும் ஊட்டச்சத்து தெளிப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை வேளாண் துறை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகளை, விவசாய ட்ரோன்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com