உத்தர பிரதேசம் தினம்: மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

உத்தர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட தினம் திங்கள்கிழமை (ஜன. 24) கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாநில மக்களுக்கு

உத்தர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட தினம் திங்கள்கிழமை (ஜன. 24) கொண்டாடப்பட்ட நிலையில், அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

சுதந்திரம் பெற்றபோது ‘யுனைடெட் பிராவின்சஸ்’ என்று அழைக்கப்பட்டு, பின்னா் உத்தர பிரதேசம் என பெயா் பெற்றதை குறிக்கும் வகையிலேயே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இது தொடா்பாக ட்விட்டரில் குடியரசுத் தலைவா் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேச மாநில மக்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். இந்திய வரலாற்றில் கலை, கலாசாரம், இலக்கியம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தங்கள் கடின உழைப்பு மூலம் உத்தர பிரதேச மக்கள் இடம் பிடித்துள்ளனா். மாநிலம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க எனது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் வாழ்த்து: பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை சிறப்பாகியுள்ளது. புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் வளா்ச்சி பல்துறைகளிலும் புதிய உச்சத்தை எட்டும்’ என்று கூறியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com